Friday, January 26, 2018

பகுத்தறிவு By Selva


This is a contributed blog by Selva.

https://facebook.com/selva.dt


பகுத்தறிவு என்பது மிகப்பெரிய காரியம் அல்ல.மிக மிக சுலபம்.

“மனிதனை மனிதனாய் பார்ப்பதே பகுத்தறிவு”

இந்த பகுத்தறிவை சுலபத்தில் அடைவதென்பது பன்முக கலாச்சாரம் கொண்ட இந்திய திருநாட்டில் கடினமாகவே உள்ளது.
சாதி, மதம், அரசியல், கலாச்சாரம், சமூகம் என இவ்வாறான பல்வேறு காரணிகள் ஒருவனின் பகுத்தறிவை அழிக்கிறது.

சாதி.

 

சாதி என்பது ஒரு தொழிலை மையப்படுத்தி அமைக்கப்பட்ட ஓர் பொருள்.
முடி திருத்தம் செய்பவர்களை அம்பட்டையார் என்றும், வியாபாரம் செய்பவர்களை செட்டியார், நாடார் என்றும், வீரமிக்க படைவீரர்கள் தேவர்கள் என்றும் சொல்லி வந்தனர்.இவ்வாறு பல்வேறு கட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பு பெற்ற சாதிகளில் ஏற்றத்தாழ்வு என்பது ஒருவனின் உழைப்பே பொறுத்தே அமைகிறது.

இவ்வாறான ஒரு பொருள் தீண்டாமையின் உச்சகட்ட எல்லைக்கு கொண்டு சென்றது மனிதனின் மடத்தனம்.தற்போது ஒவ்வொருவரும் அவர் சாதி மரபான தொழிலை செய்கிறார்களா என்பது கேள்வி. இல்லவே இல்லை என்பது ஆணித்தரமான உண்மை. இப்படி இருக்கையில் சாதி கொடியை இப்போதும் தூக்கி பிடிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை.

ஐ.டி யில் வேலை செய்யும் என்னை எந்த சாதி கூட்டுக்குள் அடைக்க போகிறீர்கள்? முடி திருத்தாக்கம் வைத்திருக்கும் எனது சித்தப்பாவையும் விவசாயம் செய்யும் என் அப்பாவையும் எந்த சாதி கூட்டத்தில் சேர்க்க போகிறீர்கள்.

மதம்.

 

தனிமனித ஒருவனின் நல்லொழுக்கத்தை கலாச்சாரம் கலந்து எடுத்துரைக்கப்பெற்றது மதம் ஆகும். மதத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் அறிந்து யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். இதுவே ஒரு மதத்தின் அடிப்படை தத்துவம்.

உனக்கு பிடித்தால் அந்த மதநெறிகளையும், எனக்கு பிடித்தால் இந்த மதநெறிகளையும் பின்பற்றலாம், நீயும் நானும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாயினும்.

இப்படிப்பட்ட தனிமனிதனை காப்பாற்ற வந்த மதம்.நாளடைவில் தலைகீழாய் போனது சமூகத்தில் உலாவும் சில சகுனி கிறுக்கன்களால். தற்போது சாதி கொடியை தூக்கி பிடிக்க அடிப்படை காரணமாய் அமைவது இந்த மத கொள்கைகள் தான்.

தாழ்த்தப்பட்ட சாதியினர் உயர்ந்த சாதியினர் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்பது இன்னமும் வழக்கத்தில் இருந்து வருகிற உண்மை நிலை. இப்படி ஒரு தீண்டாமை கலந்த மதத்தை உடைய, கீழ்த்தரமான பெருமை இந்திய இனத்திற்கே உண்டானது.இதனால் தன பெரியார் போன்றோர் சாதியை காட்டிலும் அதன் வேறான மதத்தை அடியோடு இருப்பதில் ஆர்வம் காட்டினார்கள்.

அநீதி என்னவென்றால் மேல்சாதியினர் கீழ்சாதியினர்க்கு இழைத்த தான். குடிசையை கொழுத்துதல், தீண்டாமை, கற்பழிப்பு , கல்வி மறுப்பு, வாய்ப்புகள் மறுப்பு என பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் நடப்பது தான்.

மாற்றம்.

 

பல யுங்கங்களாய் டி.என்.ஏ வில் கலந்த ஒரு பொருள், ஒரே கட்டுரையில் பொய் விடுமா என்ன?.அடிப்படை கல்வி, திறமைக்கான வாய்ப்புகள், நட்பு, கலப்பு திருமணம் போன்றவைகளால் மட்டுமே சிறிது சிறிதாய் முடியும்.

இக்கால இளைஞர்களுக்கு இவையெல்லாம் பாடம் புகட்டியது ஜல்லிக்கட்டு போராட்டமும் அதன்பின் நடக்கும் கேவலமான அரசியலும் தான்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியையும், பூணூல் அணிந்தது மற்றும் இந்து கடவுளை மையப்படுத்தி பாடியது என்று சமூகவலைத்தளத்தில் கேலி செய்வது எங்களின் பகுத்தறிவின் வளர்ச்சியை குறிக்கிறது.

சாதி மதமற்று மனிதனை மனிதனாய் பார்க்கும் மனிதனாய் இருப்போம்

No comments:

Post a Comment